இங்க பாருங்க மக்களே திலகபாமா ஜெயித்தால் மத்திய அமைச்சராவது உறுதி! இதை தடுக்கும் அதிமுக, திமுக! அர்ஜுன் சம்பத்!

By vinoth kumarFirst Published Apr 10, 2024, 2:05 PM IST
Highlights

மாற்றம் முன்னேற்றம் என்ற கொள்கை கொண்ட அன்புமணி அவர்கள் திண்டுக்கல் தொகுதியில் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக திலகபாமாவை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

சாதி வாரிய கணக்கெடுப்பு விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு திமுக மக்களை திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருவதோடு கூட்டணி கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கிழக்கு திலபாமாவிற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இதையும் படிங்க: எனக்கு பிரச்சாரம் முக்கியமல்ல! தொகுதி மக்கள் தான் முக்கியம்! மருத்துவமனைக்கு விரைந்த பாமக வேட்பாளர்!

அதற்கு முன்னதாக திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வெற்றி பெற வேண்டும் என திலகபாமாவை வாழ்த்திய அவர் செங்கோலை பரிசளித்து கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்பரையில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்: திமுக திண்டுக்கல் தொகுதி வளர்ச்சி அடைய கூடாது என்பதற்காக திட்டமிட்டு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ஏனெனில் திண்டுக்கல்லில் தொழில்கள் வளர்ச்சி அடையாத தற்கும் உட்கட்டமைப்பு வசதிகள் முறையாக ஏற்படுத்தப்படாததற்கும், சாதி மதம் மோதல்கள் ஏற்படுவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம். அதனால் தான் மாற்றம் முன்னேற்றம் என்ற கொள்கை கொண்ட அன்புமணி அவர்கள் திண்டுக்கல் தொகுதியில் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக திலகபாமாவை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் திலகபாமா நிச்சயம் மத்திய அமைச்சராவார் என்பது உறுதி. இதனால்  அவரை தோற்கடித்தே தீர வேண்டும் என்பதற்காக திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு ஒன்றாக இணைந்து செயல்படுகிறது என குற்றச்சாட்டினார். மேலும் சாதிவாரி கணக்கு எடுப்பு நடத்தப்படாததற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் காரணம் என திமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டி வருவதாகவும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் எப்போதோ சாதி வாரிய கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்தி முடித்திருக்கலாம். சாதி வாரிய கணக்கெடுப்பு விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு திமுக மக்களை திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, ராணி வேலுநாச்சியார் போன்றோர் பிறந்த பெருமைமிக்க மாவட்டமான திண்டுக்கல் தற்போது வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் திலகபாமா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்  என்றார்.

இதையும் படிங்க:  சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று பெயர் வைத்ததுதான் திமுகவின் சாதனை: திலகபாமா காட்டம்!

மது தயாரிக்கும் அதே தொழிற்சாலையில் தான் எத்தனை நாள் கிடைக்கிறது. அதனை பெட்ரோல் மற்றும் டீசலில் கலந்தால் 50 சதவீத உற்பத்தி அதிகரிப்பதோடு விலை ஏற்றத்தையும் கணிசமான அளவு கட்டுப்படுத்த முடியும். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்தால் இந்திய மக்களுக்கு எத்தனை நாள் கலந்த எரிபொருள் மலிவான விலையில் கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார். ஆனால் திமுக டாஸ்மார்க் மற்றும் போதை பொருள் கும்பலுடன் கூட்டு வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறது. எனவே வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் முன் நமது இளம் தலைமுறை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களியுங்கள் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

click me!