வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழையானது பெய்து வருகிறது. இந்தநிலையில், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லையென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொட்டித்தீர்க்கும் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவம மழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களான சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
சென்னைக்கு விடுமுறை இல்லை
இதனையடுத்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் ஒரு சில தாலுக்காவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் நேற்று மாலை முதுல் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது. மேலும் இரவு நேரத்தில் மிதமான மழையானது பெய்த்து. இதனால் சென்னையில் பள்ளிகள் இயங்குமா.? அல்லது விடுமுறை விடப்படுமா.? என்ற கேள்வி எழுந்த நிலையில், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை. வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்