இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கன மழை.. பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.?

Published : Jan 08, 2024, 06:02 AM ISTUpdated : Jan 08, 2024, 09:28 AM IST
இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கன மழை.. பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.?

சுருக்கம்

நேற்று மாலை முதல் தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழையானது கொட்டித்தீர்த்து வரும் நிலையில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

வெளுத்து வாங்கிய கன மழை

வட கிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கன மழையானது பெய்து வருகிறது. இதனால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கடலூர் உள்ளிட்ட பெருமாபாலான மாவட்டத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்றும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் , விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து இன்று விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை,அரியலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

சென்னை உட்பட 4 மாவட்டங்கள்.. இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு - Weather Man கொடுத்த அப்டேட் என்ன?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
எம்ஜிஆர்., ஜெயலலிதா ஸ்டைலில் விஜய் மாபெரும் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் நம்பிக்கை