முதலீட்டாளர் மாநாட்டின் முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதற்காக முன்னணி நிறுவனங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைத்துள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த மாநாட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஒரே நாளில் எட்டிவிட்டதாகவும் கூறியிருக்கிறது.
சென்னையில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி முதலிய பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது, முதலீடு செய்வது, தொழிலை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து பல நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளியாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
இந்நிலையில், சென்னையில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதற்காக முன்னணி நிறுவனங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.
இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவடைய உள்ளது. மாநாட்டு அரங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புவிசார் குறியீடு பெற்ற 58 பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
மாநாட்டில் இன்றைய நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.