
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகர் திலீப்பை 2 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள காவ்யா மாதவனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பிரபல மலையாள நடிகர் தீலிப் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், திலீப்பை ரகசியமாக கண்காணித்து விசாரித்தனர்.
அதில் அவருக்கு, தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நடிகர் திலீப்பை, அங்கமாலி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, திலீப் தரப்பு வழக்கறிஞர், ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதே நேரத்தில் போலீசாரும், திலீப்பை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர்.
இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, நடிகர் திலீப்பிடம் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து காவ்யா மாதவன், அவரது தாய் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.