முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் கொடுத்து வாழ்த்திய தருமபுரம் ஆதீனம்

By SG Balan  |  First Published Apr 8, 2024, 12:21 AM IST

சனிக்கிழமை பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஸ்டாலினை தரும்புரம் ஆதீனம் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக முழு வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வெள்ளி செங்கோலை வழங்கி ஆசி கூறினார்.


முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தரும்புரம் ஆதீனம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக முழுமையான வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வெள்ளியாலான செங்கோலை பரிசாக அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீன மடங்களில் ஒன்று தருமபுரம் ஆதீனம். இந்த மடத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது தரும்புரம் ஆதீனம் தலைமையில் தமிழ்நாட்டின் முக்கிய மடாதிபதிகள் கலந்துகொண்டனர். திறப்புவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் தரும்புரம் ஆதீனம் செங்கோல் வழங்கினார்கள்.

நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதே தருமபுரம் ஆதீனம் இப்போது முதல்வருக்கும் செங்கோல் கொடுத்து வாழ்த்தி இருக்கிறார். கடலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் சந்தித்தார்.

சனிக்கிழமை பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஸ்டாலினை தரும்புரம் ஆதீனம் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக முழு வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வெள்ளி செங்கோலை வழங்கி ஆசி கூறினார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் உடன் இருந்தார்.

இதுகுறித்து தருமபுரம் ஆதீனத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், "திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் நேற்று (சனிக்கிழமை) கடலூரில் தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

வெயிலில் வாடி வதங்கும் மக்களுக்கு குட் நியூஸ்... அடுத்த 6 நாட்களில் கோடை மழைக்கு வாய்ப்பு!

click me!