நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக தரும்புரி தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
விறு விறு வாக்கு எண்ணிக்கை
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது . தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டியானது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டது. தருமபுரி தொகுதியை பொறுத்தவரை பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மேட்டூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடகியுள்ளது.
சவுமியா அன்புமணி வாக்கு நிலவரம் என்ன.?
இந்த தருமபுரி மக்களவை தொகுதியை பொறுத்தவரை இதுவரை பாமக 4 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 2 முறையும், தமாகா ஒரு முறையும் வென்றுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற 2019 மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது இடத்தை பெற்றார். இந்தநிலையில் தற்போது பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக சார்பாக அன்புமணியின் மனைவி சவுமியா வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். தற்போது வாக்கு எண்ணிக்கையின் நிலவரத்தின் படி சவுமியா திமுக வேட்பாளரை விட முன்னிலை வகித்து வருகிறார்.
வேட்பாளர்கள்
பாமக- செளமியா அன்புமணி- 3, 07,790
திமுக- ஆ.மணி- 3,21,493 வாக்குகள்
அதிமுக- அசோகன்- 2,15,646 வாக்குகள்