Durai Vaiko: மக்களே எஜமானர்கள்; வெற்றி முகத்தில் துரைவைகோ பேட்டி

By Velmurugan s  |  First Published Jun 4, 2024, 10:47 AM IST

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.


நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரைவைகோ போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த துரைவைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

Thirumavalavan: சிதம்பரம் தொகுதியில் திருமா தொடர்ந்து முன்னிலை; தொண்டர்கள் உற்சாகம்

Tap to resize

Latest Videos

அப்போது அவர் கூறுகையில், தற்போது வரை நான் முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன். தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர்.

Theni Lok Sabha Election Result 2024 : தேனி மக்களவை தொகுதியில் விசில் அடிக்குமா குக்கர்? முன்னனி நிலவரம் என்ன?

என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை, எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன் எனக் கூறினார்.

click me!