திருவானைக்காவல் கோவிலின் செல்லப்பிள்ளை அகிலாவுக்கு கஜ பூஜையுடன் பிறந்த நாள் கொண்டாடிய பக்தர்கள்

By Velmurugan s  |  First Published May 24, 2024, 8:18 PM IST

திருவானைக்காவல் கோவிலின் செல்லப்பிள்ளையாக வளம் வரும் கோவில் யானை அகிலாவின் 22வது பிறந்தநாளை பக்தர்கள் கொண்டாடிய நிலையில், யானை அவர்களுக்கு தும்பிக்கையை உயர்த்தி நன்றி தெரிவித்தது.


2002ம் ஆண்டு பிறந்த அகிலா யானையானது கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது திருக்கோவில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி யானை அகிலாவிற்கு இன்று 22-வது வயதை எட்டும் நிலையில் திருக்கோவில் சார்பில் யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஓசி டிக்கெட் விவகாரம்; அரசுப் பேருந்துகளை ரவுண்டு கட்டி பழி தீர்க்கும் போலீஸ் - சீட் பெல்ட்க்காக பைன்

Tap to resize

Latest Videos

கோவில் யானை அகிலா அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு பின்னர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானைக்கு கஜ பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்று யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடினர். 

நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் நான் கட்சியை கலைத்துவிடுகிறேன் - சீமான் சவால்

இதனைத் தொடர்ந்து பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர். பக்தர்கள் ஒருசேர பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர். அதனை ஏற்றுக் கொண்டு தும்பிக்கையை ஆட்டி தனது நன்றியைத் தெரிவித்தது. அதனைப் பார்க்க வந்த அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

click me!