விருதுநகர் மக்களவைத் தொகுதி விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் என மதுரை மாவட்டத்தின் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிகவின் விஜய பிரபாகர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் என மதுரை மாவட்டத்தின் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. விருதுநகர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,28,158, பெண் வாக்காளர்கள் 7,63,335, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 202 என மொத்தம் 14,91,695 வாக்காளர்கள் உள்ளனர்.
undefined
இதையும் படிங்க: Lok Sabha Elections 2024: 7 தொகுதிகளில் 3வது இடம்! மாஸ் காட்டும் நாம் தமிழர் கட்சி! அதிர்ச்சியில் அதிமுக,பாஜக!
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர், 2009, 2014, 2019 என மூன்று முறை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இருமுறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 2ம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகின்றனர். ஆகையால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் விஜய பிரபாகர் முன்னிலையில் இருந்து வந்தார். பிறகு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் இடையே மாறி மாறி முன்னிலை வந்தனர். இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது 5,495 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூ முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பின்னடைவு! அதிமுகவை முந்திய நாம் தமிழர் கட்சி!
விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள்:
விஜய பிரபாகர்(தேமுதிக) - 1,87,554
மாணிக்கம் தாக்கூர்(காங்கிரஸ்) - 1,93,315
ராதிகா சரத்குமார்(பாஜக)- 76,479
கெளசிக்(நாம் தமிழர்)- 37,395