படிப்பு செலவுக்கு தொடர்ந்து உதவி செய்யும் தருமபுரி எம்.பி செந்தில்....! பாராட்டுக்கள் சார் !

By manimegalai a  |  First Published Nov 23, 2021, 12:27 PM IST

தாயயை இழந்து தந்தை ஆதரவின்றி தனது பாட்டி உடன் வாழும் கல்லூரி மாணவி முகிலரசியின் படிப்பு செலவுக்கு உதவி இருக்கிறார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.


தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். ட்விட்டர்  மூலம் தனக்கு வரும் புகார்களை எடுத்து விசாரித்து தீர்த்து வைக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கல்வி மற்றும் மாணவர்களின் நலன் தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவி வருகிறார்  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.சமூக வலைதளம் மூலம் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார்.

Tap to resize

Latest Videos

இதேபோல முகிலரசி என்ற மாணவி கல்லூரி படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்படுகிறார் என்ற தகவல் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு தெரிய வந்தது. உடனே முகிலரசியை தொடர்பு கொண்டு உதவி செய்து ‘அசத்தி’ இருக்கிறார் தருமபுரி எம்.பி செந்தில்குமார். கல்லூரி மாணவி முகிலரசி கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் தவிக்கின்றார். தாயயை இழந்து, தந்தையின்  ஆதரவின்றி பாட்டியின் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் மூன்றாம் ஆண்டு எலெக்ட்ரானிக் சயின்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்து வருகிறார். 

மாணவி முகிலரசி, மேலும் படிப்பை தொடர முடியாமல் இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறார் தருமபுரி எம்.பி செந்தில் குமார். இந்நிலையில் கல்வி கட்டணமான   ரூபாய் 15,000 வழங்கி உதவி செய்திருக்கிறார்.அதுமட்டுமின்றி  இறுதி செமஸ்டர் கட்டணத்தையும் தானே ஏற்பதாக உறுதியும் அளித்துள்ளார் எம்.பி செந்தில் குமார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அவர்.  

தருமபுரி எம்.பி செந்தில்குமார் உதவுவது இது முதல் முறை அல்ல.பலமுறை பல்வேறு மாணவ - மாணவிகளின் கல்வி செலவு ஏற்று, அவர்களின் வாழ்வில் வளர உதவி இருக்கிறார் என்பதே உண்மை. கடந்த செப்டம்பர் மாதம் மாணவர் சரண் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பயில உதவியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டம் பயின்று வரும் மாணவர் சரண், குடும்ப வறுமையின் காரணமாக கல்வி படிப்பை தொடர முடியாமல் இருக்கிறார்.அவருக்கு உதவுங்கள் என்று  ‘ரீவேம்ப்’ (Revamp) எனும் அமைப்பினர் தருமபுரி எம்.பி செந்தில்குமாரை ட்விட்டரில் டேக் செய்து, பதிவிட்டனர்.

இதனை பார்த்த எம்.பி செந்தில்குமார், உடனே ரூ.15,000 -த்தினை  சரண் என்ற அம்மாணவருக்கு அனுப்பி உதவி இருக்கிறார்.தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் வேறு எங்கிருந்து உதவி தேவைப்பட்டாலும் சரி, உடனே உதவி செய்கிறார் தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார். கடந்த பிப்ரவரி மாதம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து டிப்ளோ படித்த தனக்கு பிடெக் படிக்க ஆசை என்றும் அதற்கு உதவி செய்வேண்டும் எனவும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ருசுபோடா கோரியிருந்தார். 

இதைக்கண்டதருமபுரி எம்.பி செந்தில்குமார், மாணவியின் சொந்த ஊருக்குச் சென்று 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதுமட்டுமில்லாமல் மேலும் மேற்படிப்புக்கும் உதவுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் எம்.பி செந்தில்குமார். தேர்தலில் வென்ற பிறகு தொகுதி பக்கமே திரும்பி பார்க்காத அரசியல்வாதிகளில், தருமபுரி திமுக எம்.பியின் இத்தகைய உதவிகள் அணைத்து தரப்பினரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.

 

click me!