வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி.. திட்டமிட்டு கொலையா? வேன் பறிமுதல்.. வெளியான புதிய தகவல்..!

By vinoth kumar  |  First Published Nov 23, 2021, 11:11 AM IST

அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேனை சோதனையிட மறித்தபோது அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது பயங்கரமாக மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது. இதில், கனகராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு கனகராஜை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 


கரூரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளரை மோதிக் கொன்ற வழக்கில் ஜவுளி நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றிச்செல்லும் வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் கனகராஜ் (56). அங்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றிய இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, கரூர் வையாபுரி நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் கனகராஜ் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் கரூர்- திருச்சி பைபாஸ் சாலை, வெங்ககல் பட்டி மேம்பாலத்தின் கீழ் வழக்கம் போல் கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

Latest Videos

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேனை சோதனையிட மறித்தபோது அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது பயங்கரமாக மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது. இதில், கனகராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு கனகராஜை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இதனையடுத்து,  கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.  வாகன சோதனையின் போது திட்டமிட்டு வேன் ஏற்றி கனகராஜ் கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்திலும், நிற்காமல் சென்ற அந்த வேன் யாருடையது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், தோகைமலை அடுத்த கழுகூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேன் ஜவுளி நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றிச்செல்லும்  வேன் என்பது தெரியவந்ததுள்ளது. மேலும், வட்டார போக்குவரத்து ஆய்வாளரை கொலை செய்து விட்டு நிற்காமல் சென்ற ஓட்டுநர் சுரேஷ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

click me!