கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் இருந்து வருகிறார். இன்று காலை அவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, அந்த வேன் நிற்காமல் அவர் மீது மோதிவிட்டு அதிகவேகமாக சென்றுவிட்டது.
கரூரில் வாகன சோதனையின் போது அதிகவேகமாக வந்த வேன் மோதியதில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு வேன் ஓட்டுநர் நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் இருந்து வருகிறார். இன்று காலை அவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, அந்த வேன் நிற்காமல் அவர் மீது மோதிவிட்டு அதிகவேகமாக சென்றுவிட்டது.
undefined
இதில், தூக்கி வீசப்பட்ட பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இந்த விபத்து தொடர்பாக உடனே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் மோதிய வாகனம் பதிவாகி உள்ளதா? என்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. கரூரில் வாகனம் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஆடு திருடிய கும்பலை விரட்டி பிடிக்க முயற்சித்த எஸ்.ஐ. பூமிநாதன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் அடங்குதவற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.