இதை கவனித்த ஆட்சியர் பிரபுசங்கர், அந்த நபரை பின்தொடர்ந்து சென்றார். அந்த நபர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டார். இதனையடுத்து, அந்த நபரின் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஆட்சியர், தனது பாதுகாவலர் மூலம் தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்ற இளைஞரை வீடுவரை விரட்டி சென்று கரூர் மாவட்ட ஆட்சியர் மடக்கி பிடித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியராக மருத்துவர் பிரபுசங்கர் பணியாற்றி வருகிறார். இவர் அலுவலக பணி நிமித்தமாக தனது காரில் கரூர் நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தான்தோன்றிமலை பகுதியிலிருந்து நேற்று மாலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, ஆட்சியர் பிரபுசங்கர் தனது அலுவலக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வாகனத்தின் முன்பு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஒருவர் தாறுமாறாக வாகனத்தை இயக்கி, சாலையில் சென்றுகொண்டிருந்த மக்களை அச்சுறுத்தினார்.
இதை கவனித்த ஆட்சியர் பிரபுசங்கர், அந்த நபரை பின்தொடர்ந்து சென்றார். அந்த நபர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டார். இதனையடுத்து, அந்த நபரின் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஆட்சியர், தனது பாதுகாவலர் மூலம் தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய தங்கராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்சியரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.