கரூரில் வடக்கு பிரதட்சணம் சாலையில் எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவராக ரஜினிகாந்த் என்பவர் உள்ளார். இந்த மருத்துவமனையில் காசாளராக கரூர் பசுபதிபாளையம் சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்காததால் பணிக்கு வராமல் இருந்தார்.
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கரூரில் பள்ளி மாணவிக்கு தனியார் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் வடக்கு பிரதட்சணம் சாலையில் எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவராக ரஜினிகாந்த் என்பவர் உள்ளார். இந்த மருத்துவமனையில் காசாளராக கரூர் பசுபதிபாளையம் சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்காததால் பணிக்கு வராமல் இருந்தார்.
undefined
இதையும் படிங்க;- வெட்கமா இல்ல.. என் புருஷனுக்கு நீ ஏண்டி இப்படி அலையறே? வீட்டுக்கு வந்த தோழியால் ரோட்டுக்கு வந்த குடும்பம்.!
இதனிடையே, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வரும் மருத்துவமனை காசாளரின் மகளுக்கு மருத்துவர் ரஜினிகாந்த் போன் செய்து பணிக்கு வராததன் காரணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, அவரது மகள் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு தாய் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க 2 கள்ளக்காதலர்கள் போட்டா போட்டி.. அப்புறம் நடந்த கூத்தை மட்டும் பாருங்களே.!
தொடர்ந்து அவரிடம் பேசிய மருத்துவர் ரஜினிகாந்த் உங்கள் தாய்க்கு தரவேண்டிய தீபாவளி ஊக்கத்தொகையை மருத்துவமனைக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு வெளியூர் செல்ல இருப்பதாகவும் கூறி மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார். அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்ற மருத்துவர் ரஜினிகாந்த் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அவரிடம் ஒரு வழியாக தப்பித்த மாணவி கூச்சலிட்டப்படியே வெளியே ஓடிவந்துள்ளார்.
பின்னர், வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய தன் தாயிடம் நடந்தவற்றை கூறி மகள் கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.