
காபந்து அரசின் முதலமைச்சராக இருக்கும் ஒ.பன்னீர் செல்வம் பல அதிரடிகளை செய்து வருகிறார். இன்னும் எத்தனை மணி நேரம் முதலமைச்சராக இருப்பார் ஒ.பன்னீர் செல்வம் என்பதற்கான விடை காலத்தின் கையில்தான் உள்ளது. இன்று மாலை அதற்கான விடை தெரிந்துவிடும்.
அடுத்த அரசு பதவி ஏற்கும் வரை இந்த அச்சுறுத்தல்களை எப்படி சமாளிப்பது? தமிழகத்தின் ஒ.பன்னீர் செல்வம் பிரிவு, சசிகலா பிரிவு அதிமுகவினரிடையே பல இடங்களில் மோதல் நடைப்பெற்று வருகிறது, இதனை சரியாக எப்படி கையாளுவது? என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
டிஜிபி மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தினர் ஒபிஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எழுந்துள்ளது.
அடுத்த பல மணி நேரங்களுக்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடிய ஒ.பன்னீர் செல்வம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழ்நிலையில் கிலி பிடித்துபோய் இருக்கின்றனர் ஒ.பன்னீர் செல்வத்தின் எதிர் தரப்பினர்.