
அரசியலில் மட்டுமின்றி, அரசு நிர்வாகத்திலும் ஒபிஎஸ் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்,
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தலைமை செயலாளராக இருந்தவர் ஞானதேசிகன் ஐஏஎஸ். நிதித்துறை செயலாளராக இருந்த இவரை தலைமைச் செயலாளராக்கினார் ஜெயலலிதா.
பின்னர், சில காரணங்களுக்காக பதவி இறக்கம் செய்யப்பட்டு திட்கோ மேலாண்மை இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
ஞானதேசிகன் தலைமை செயலாளராக இருந்தபோது, கூடுதல் தலைமை செயலாளராக இருந்தவர் அதுல் ஆனந்த் ஐஏஎஸ்.
நத்தம் விஸ்வதநாதன் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது, ஊழல் நடைப்பெற்றதாகவும், தென் மாவட்டங்களில் தாது,மணல் ஊழல் செய்யும் வைகுந்தராஜனுக்கு ஆதரவாக இருந்ததாகவும் எழுந்த புகாரில் எட்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், சசிகலா குடும்பத்தினரின் உள்குத்து காரணமாக ஞானதேசிகன் கார்னர் செய்யப்பட்டார். அவரோடு ஞானதேசிகனுக்கும் தொடர்பு இருப்பதகா கூறி அவர் இறுதியில் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
ஞானதேசிகனுடன் சேர்த்து கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருந்த அதுல் ஆனந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்டு 30-ஆம் தேதி இவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்ட் உத்தரவு தற்போது, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
ஒபிஎஸ் ராஜினாமா செய்துள்ள நிலையில் அவர் தற்போது காபந்து அரசின் முதல்வராக உள்ளார். இடைப்பட்ட காலத்தில் பல அதிரடிகளை செய்துவருகிறார்.
அடுத்த ஆட்சி அமையும் ஓரிரு நாட்களுக்கு உள்ளாகவே முதல்வன் பட பாணியில் சசி குடும்பத்தை குறிவைத்து, ஜெயலலிதா வீடு மற்றும் சொத்துக்கள் மீது எதாவது நடவடிக்கை எடுத்துவிடுவாரா? என்ற அச்சமும் மன்னார்குடி ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.