சசிகலாவுக்கு ஆதரவா? தொகுதி பக்கம் வராதே! – எம்.எல்.ஏவுக்கு மக்கள் எச்சரிக்கை…

 
Published : Feb 09, 2017, 10:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சசிகலாவுக்கு ஆதரவா? தொகுதி பக்கம் வராதே! – எம்.எல்.ஏவுக்கு மக்கள் எச்சரிக்கை…

சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.P.B.பரமசிவம். இவர், எம்.பி.பி.எஸ். ஆர்தோ முடித்திவிட்டு இளம் வயதிலேயே எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவரின் தந்தை முன்னாள் துணை சபாநாயகர், பாலசுப்பிரமணியம்.

இவர் எம்.எல்.ஏவாக இருக்கும் வேடசந்தூர் தொகுதி மக்கள் இவருக்கு, ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அது பின்வருமாறு:

”மாண்புமிகு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு V.P.B.பரமசிவம் அவர்களுக்கு, மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் தலைமையில் தங்களது பெயரில் நாங்கள்  வைத்திருக்கும் தனிப்பட்ட மரியாதைக்குரிய அன்பின் காரணமாக தேர்தலில் வெற்றி பெற  உங்களுக்கு வாக்குகள் அளித்து வந்துள்ளோம்.

ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடைபெறத்தானே தவிர, சசிகலா தலைமையில் ஆட்சி நடைபெற அல்ல.

அப்படி ஒரு நிலையில் தாங்கள் சசிகலாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பின் மீண்டும் எங்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம். அவ்வளவு ஏன் நீங்கள் வேடசந்தூர் பகுதிக்கே கூட வர வேண்டாம்.”

இப்படிக்கு

வேடசந்தூர் சட்டமன்ற வாக்காளர்கள்

என்ற ஒரு அன்பான வேண்டுகோளை வாக்காளப் பெருமக்கள், எம்.எல்.ஏ V.P.B.பரமசிவத்திற்கு விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழ்நாடு என்ற பெயர் திமுகவிற்கு கசக்கிறதா..? இது தான் நீங்கள் தமிழை வளர்க்கும் முறையா..? சீமான் கேள்வி
மெழுகுவர்த்தி, டார்ச் லைட் தயாரா வச்சுக்கோங்க.. தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி வரை மின்தடை.!