ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க சவால் விடுத்த சரத்... ராதிகாவின் வரி பாக்கி தொகை என்ன தெரியுமா.? வெளியான தகவல்

By Ajmal KhanFirst Published Apr 16, 2024, 11:10 AM IST
Highlights

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை நேருக்கு நேர் விவாதிக்க நடிகர் சரத்குமார் அழைப்பு விடுத்திருந்த நிலையில், சரத்குமார் மற்றும் ராதிகாவின் வரி பாக்கி தொடர்பான தகவல் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு- ஸ்டாலின் ஆவசேம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும் என்று குஜராத் முதலமைச்சராக இருந்தபோது எதிர்த்த நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். தற்போது பிரதமரானதும், ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம் என்று ஒரே நாடு ஒரே வரி கொண்டு வந்தார்.  ஓட்டல் முதல் டூவீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஓட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்துப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?. என காட்டமாக கேட்டிருந்தார். 

DMK : தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மோடியின் சதித்திட்டம்.. 39 தொகுதி 31ஆக குறையும் -அலர்ட் செய்யும் ஸ்டாலின்

ஸ்டாலினுக்கு சவால் விடுத்த சரத்

இந்தநிலையில் நெல்லையில் பாஜகவிற்கு ஆதரவாக சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடியை விமர்சித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக அவர் கூறும் போது, மோடி குஜராத்தில் எளியவராக இருந்து  3 முறை முதலமைசர். இரண்டு முறை பிரதமர், அவருக்கும் (ஸ்டாலினுக்கும்) உங்களுக்கும் ஏணி வைத்தாலும எட்டாது. உங்களுக்கு கீழ்தரமான அரசியல் தான் பேச தெரியும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன்.  ஜிஎஸ்டி குறித்து நன்கு படித்துவிட்டு அவர் என்னுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு வரட்டும்.  ஒரு டிவி சேனலில் அவருடன் விவாதிக்க நான்  தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?" என சரத்குமார் சவால் விடுத்திருந்தார்.

ராதிகாவின் வரி பாக்கி என்ன.?

இந்தநிலையில் திமுகவின் ஆதரவாளர்கள்,  விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா தனது வேட்புமனு பிரமாணப்பத்திரத்தில் பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி வரி தொடர்பாக தெரிவித்துள்ளார். அதனை தற்போது சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர். அதில் ராதிகா பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 6.54 கோடி ரூபாய் என்றும் சரத்குமார் பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 8.48 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இருவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை 15 கோடி ரூபாய்! என ராதிகா சரத்குமாரின் தேர்தல் பிரமான பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

Indirakumari passed away : முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்! அதிமுக டூ திமுக அரசியல் பயணம் என்ன?

click me!