நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. பிரசாரத்தின் க்ளைமேக்ஸ் புதன்கிழமையோடு நிறைவடைகிறது.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமாவின் மது ஒழிப்பு குறித்த பேச்சு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திமுக, அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. பிரசாரத்தின் க்ளைமேக்ஸ் புதன்கிழமையோடு நிறைவடைகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தம் கட்சிக்காகவும் வேட்பாளர்களுக்காகவும் தீவிரப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் தொகுதியைப் பொறுத்தவரை SDPI கட்சியின் மாநிலத் தலைவர், பாமகவின் பொருளாளர், சிபிஎம்மின் மாவட்டச் செயலாளர் என கட்சிகளின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கள் போட்டியிடுவதால் திண்டுக்கல் தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
undefined
இதையும் படிங்க: நான் ஒன்றும் கமிஷன் வாங்கி முன்னேறியவள் இல்லை! ஐ.பெரியசாமிக்கு பணம் வேண்டுமானால் நான் தருகிறேன்! திலகபாமா!
இம்மூன்று வேட்பாளர்களில் ஒருபடி முன்னே நிற்பவர் பாமக வேட்பாளர் திலகபாமா. தொகுதியின் முக்கியமான பிரச்சினைகளை எடுத்து களத்தில் அடித்து ஆடுகிறார். குடியால் பல குடும்பங்கள் சீரழிந்து கிடக்கின்றன. விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்ட வழியில்லாமல் மதிப்பிழந்து கிடக்கின்றன. இவையெல்லாம் திலகபாமாவின் பிரசாரத்தின் பேசுபொருட்களாக இருக்கின்றன.
மது ஒழிப்பு குறித்த பேச்சு திலகபாமாவின் பிரசாரத்தில் அதிகளவில் இருக்கிறது. இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 24 மணி நேரமும் கிடைக்கும் மது ஒழிக்கப்பட வேண்டும் என பெண்களே திலகபாமாவிடம் கோரிக்கை விடுக்கின்றனர். மதுவால் கணவனை இழந்த பெண்களை தந்தையை இழந்த குழந்தைகளை நேரடியாகச் சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் சொல்கிறார் திலகபாமா. இவற்றையெல்லாம் தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று எடுத்துக் கொள்ள முடியாது. 2017 ல் சிவகாசியில் ஒரு டாஸ்மாக் கடையை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு 15 நாட்கள் சிறையில் இருந்து விட்டு வந்தவர் திலகபாமா. பாமகவின் கொள்கையும் மதுவற்ற தமிழ்நாடு என்று இருப்பதால் இந்த பிரசாரக் களத்தில் மதுவிற்கு எதிரான பேச்சு அதிகளவில் இருந்தது. மதுபானம் ஒன்றிற்கு வீரன் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதையும் திலகபாமா சாடத் தயங்கவில்லை.
தமிழ்நாட்டிலேயே அதிகளவிலான நூதனப் பிரசாரத்தில் ஈடுபட்டவர் திலகபாமாவாகத்தான் இருக்க முடியும். வயலில் இறங்கி நாற்று நடுவது, பஞ்சாமிர்தம் விற்பது, குதிரை வண்டி ஓட்டுவது, கரும்பு ஜூஸ் பிழிவது, பயிர்களுக்கு மருந்து அடிப்பது, வடை சுடுவது, சாக்லேட் விற்பது, புளிதட்டி தருவது, மல்லிகைப் பூ பறிப்பது, தறி நெய்வது, பறை இசைப்பது என பலவிதமான பிரசாரங்களால் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.
மாம்பழ, கொய்யா கூழ் தொழிற்சாலை, முருங்கை, புளி போன்றவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவது, விக் தயாரிக்கும் தொழிற்சாலை, காய் கனிகளை பதப்படுத்தும் கிடங்குகள் அமைப்பது, உழவர் தொழில்நுட்ப மையம் அமைத்தல் என பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு அளித்திருக்கிறார். இவையெல்லாம் முன்னர் எம்.பிக்களாக இருந்த அதிமுக திமுகவைச் சேர்ந்தவர்கள் இவற்றில் பலவற்றை சொல்லியும் இப்போது வரை செய்யவில்லை.
இதையும் படிங்க: இங்க பாருங்க மக்களே திலகபாமா ஜெயித்தால் மத்திய அமைச்சராவது உறுதி! இதை தடுக்கும் அதிமுக, திமுக! அர்ஜுன் சம்பத்!
ஐந்தாண்டுகளாக எம்.பி.,யாக இருந்த திமுகவைச் சேர்ந்த வேலுசாமி தொகுதிக்கென இதுவரை எதையுமே செய்யவில்லை என்பதே இத்தொகுதி மக்களின் பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது. திண்டுக்கல் தொகுதியை வளமான தொகுதியாக மாற்றுவேன் என களமிறங்கி இருக்கும் திலகபாமாவிற்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.