
தமிழக வரலாற்றில் நீங்கா துயராக பதிவாகி இருக்கிறது தூத்துக்குடி துயரச் சம்பவம். இவ்வளவு பிரச்சனைகள் அங்கு போய்க்கொண்டிருந்த போது தமிழகத்தின் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு சென்று இந்த சம்பவம் குறித்து விசாரிக்காதது ஏன்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாதது ஏன் என ஊடகங்களும், மக்களும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் தூத்துக்குடியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் சட்டத்தை மதித்து நான் அங்கு செல்லவில்லை. என பதிலளித்திருந்தார். அவரது இந்த பொறுப்பற்ற பதில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது.
தற்போது தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீங்கிவிட்டது. இதனால் அங்கு சகஜ நிலை திரும்பியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் வரும் திங்கள் கிழமை தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
முன்னதாக எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் , தொல் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் போன்றோர் 144 தடை உத்தரவையும் மீறி தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தங்கள் ஆதரவையும் அளித்தது கூறிப்பிடத்தக்கது