பீதி கிளப்பும் டெங்கு !!  இன்று ஒரே நாளில் 5 பேர் பலி !!  கரூர் - திருச்சி  சாலையில் மறியல் !!!

 
Published : Oct 06, 2017, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
பீதி கிளப்பும் டெங்கு !!  இன்று ஒரே நாளில் 5 பேர் பலி !!  கரூர் - திருச்சி  சாலையில் மறியல் !!!

சுருக்கம்

dengue fever children killed

தமிழகத்தில் சென்னை தொடங்கி, திருவள்ளூர், தேனி, சேலம், தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் பிற்பகல் வரை மதுரை, திருச்சி,கரூர் உட்பட பல இடங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மிகச் சிலரே இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, டெங்குவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், டெங்கு காய்ச்சலின் தீவிரம் இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுவதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. 



சேலத்தில் ஏற்கெனவே சிலர் டெங்குவால் உயிரிழந்திருக்கும் நிலையில் தற்போது கவிஆனந்த் என்ற 4-ம் வகுப்பு மாணவன் இந்த காய்ச்சலுக்கு பலியாகியிருக்கிறான். சேலத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 9 பேர் உயிரிழந்திருப்பதால், அம்மாவட்ட மக்களிடையே டெங்கு காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளது. 

வேலூர் மாவட்டத்திலும் டெங்கு நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் டெங்குவின் பாதிப்பால் சிலர் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 110 பேருக்கு மேல் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு, உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



கடுமையான மர்மக் காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோமவாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் மற்றும் சலவநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சென்னியப்பன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 



இதனிடையே கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் மணவாசி கிராமத்தைச் சேர்ந்த பூஜா  என்ற் சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு , திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கனவே  அந்த சிறுமிக்கு கரூர் அரசு மருத்துமனையில்  சிகிச்சை அளிக்காமல் திருச்சி அனுப்பப்ட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜா இன்று சிகிச்சை  பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து  டெங்குவால் உயிரிழந்த சிறுமியின் உடலை கிடத்தி கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வைத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!