அண்ணாமலை மீது திமுகவின் பொருளாளர் டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
திமுகவை சேர்ந்த 12 நபர்களுடைய சொத்து பட்டியலை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதில் திமுக அமைச்சர்கள் உள்பட பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பட்டியல் தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அண்ணாமலைக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தனது கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்த அண்ணாமலை மீது திமுகவின் பொருளாளர் டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உள்ள நிலையில் தற்போது அவர் போட்டுள்ள ஒரு ட்வீட் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
அந்த ட்விட்டர் பதிவில் "திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர் பாலு அவர்களின் சொத்து குவிப்பு பற்றிய தகவல்களை பிஜேபி சார்பாக DMK Filesல் வெளியிட்டது தொடர்பாக அவர் என்மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராக உள்ளேன்."
"ஊழல் என்னும் கரையான் இத்தனை ஆண்டு காலம் நம் நாட்டை எப்படி அறிந்திருக்கிறது என்றும் அதனை அரசியலில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அறிவார்கள்".
திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, சார்பாக இல் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை (14/07/2023) நேரில் ஆஜராக உள்ளேன்.
ஊழல்…
"நமது மாண்புமிகு நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, திமுகவினர் சொத்துகுவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்துவேன்" என்று கூறியுள்ளார்.
ஆகவே நாளை பாஜக தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.