
அரியலூர்:
தீபா - சசிகலா ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் உருட்டுக் கட்டையால் தாக்கி கொண்டனர்.
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய, ஒபிஎஸ், தீபாவுக்கு அழைப்பு விடுப்பேன் என்று தீபாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.
மேலும், ஜெ,வின் மரணம் குறித்து விசாரிக்க தக்க ஏற்பாடுகள் செய்வேன் என்றும் ஒரே போடு போட்டார்.
அந்த அறிவிப்பில் இருந்து சசிகலா தரப்பு சற்று ஆடிப்போய் இருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.
ஏற்கனவே, சசிகலா எதிர்த்து வரும் தீபா ஆதரவாளர்கள், ஒபிஎஸ்ஸின் இந்த அறிவிப்புக்கு பின்னர், தங்களின் பலம் கூடியதாகவே கருதுகின்றனர்.
இந்த நிலையில், முன்னால் அதிமுக எம்எல்ஏ இளவழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், சசிகலா உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதனை அறிந்து சசிகலா ஆதரவாளர்கள் அந்த இடத்திற்கு உருட்டுக் கட்டையுடன் வந்தனர்.
வந்தவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில், தீபா ஆதரவாளர்களை சமரமாரியாக தாக்கினர்.
பின்னர், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர்.