சென்னையிலிருந்து 700 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!!

By Narendran SFirst Published Dec 7, 2022, 11:36 PM IST
Highlights

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 700 கி.மீ தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 700 கி.மீ தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனமழை முன்னெச்சரிக்கை... திருவாரூர், தஞ்சையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

இதனிடையே வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 700 கி.மீ தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும் இந்த புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு... பார்ப்பது எப்படி? விவரம் உள்ளே!!

இந்த புயல் காரணமாக நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நாளை மறுதினம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையிலும் 9 மற்றும் 10ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!