கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அதே நேரத்தில் வடஇலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஒன்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து அந்தமான் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இணைந்துள்ளது.
இதையும் படிங்க: சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!
undefined
இதனால் இந்த இரு காற்றழுத்தங்களின் இணைப்பு மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 770 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: போலீசார் தயாராக இருக்க வேண்டும்... அதிரடி உத்தரவு பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு!!
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்றும், நாளை காலை வடதமிழகம் - புதுச்சேரி ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.