சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு.. கர்ப்பிணி உள்பட 5 பேருக்கு தீவிர சிகிச்சை..!

By vinoth kumar  |  First Published Oct 7, 2022, 8:57 AM IST

திருவாரூரில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திருவாரூரில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இவருக்கு பூ முடிக்கும் நிகழ்ச்சி விக்னேஷ் வீட்டில் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் 5 வகை சாதமான தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், பிரிஞ்சி சாதம், கருவேப்பில்லை சாதம், லெமன் சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- குறைந்த விலைக்கு பிரியாணி கொடுக்காததால் ஆத்திரம்.. ஊழியரின் மூக்கை வெட்டிய இளைஞர்.. சென்னையில் அதிர்ச்சி.!

சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்வமுருகன் (24), சந்துரு (10), இளரா (62), செல்வகணபதி (25), பாலாஜி (22), ராஜமாணிக்கம் (60), கர்ப்பிணி மாரியம்மாள், 4 வயது குழந்தை ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில், வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (24) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- பிரியாணி பிரியர்களே உஷார்.. பிரபல ஓட்டலில் வாங்கிய பிரியாணியில் புழு.. தெனாவட்டாக பதில் கூறிய ஊழியர்கள்.!

click me!