தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கு ஏற்றார்போல பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
இதையும் படிங்க;- ராசிபுரத்தில் வரலாறு காணாத மழை.. நீரில் மிதக்கும் அரசு மருத்துவமனை.. நோயாளிகள் கடும் அவதி..!
சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மட்டும் நடத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- இந்த 3 மாவட்ட மக்கள் உஷார்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?