ஹைட்ரோகார்பன் கிணறு.. புதிய பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசிக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By vinoth kumarFirst Published Aug 12, 2022, 11:44 AM IST
Highlights

மன்னார்குடி அருகே தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றில் புதிய பணியை மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி அருகே தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றில் புதிய பணியை மேற்கொள்ள ததடை விதிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் பெரியகுடி என்ற கிராமத்தில் 2013ம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டப்பட்டது. அப்போது, அதிக அழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டு அந்த கிணறு தற்காலிகமாக மூடப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் அந்த கிணற்றில் சரி செய்து பணிகள் தொடங்க அனுமதி அளிக்குமாறு ஓஎன்ஜிசி நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு இருக்கிறது. இதையறிந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும்பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டினர். 

இந்த சூழலில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள  ஹைட்ரோகார்பன்  கிணற்றில் மீண்டும் புதிய பணிகள் தொடங்குவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரியகுடி கிராமத்தில் புதிதாக எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற்ற பிறகே புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிணற்றை மூடலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

click me!