
அமைச்சர் மனோ தங்கராஜ் இதுகுறித்து பேசிய போது, “அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது. தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ₨1 முதல் ₨2 வரை அதிகம் கிடைக்கும்.
தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படும். பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதிகபட்ச கொழுப்பு 5. 9%, இதர சத்துகள் 9. 0% உள்ள பாலுக்கு ரூ. 40. 95 கொள்முதல் விலை வழங்கப்பட்டு வந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
பாலின் விலைய தரத்துக்கு ஏற்ப பிரித்து 6. 0, 6. 1, 6. 2, 7. 5 என தரப்பட்டியலை உயர்த்தி உச்சபட்சமாக 7. 5% வரை பால் கொள்முதல் விலைப்பட்டியல் விரிவாக்கம் செய்துள்ளது” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.