ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.. பணி நிச்சயம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி !!

By Raghupati R  |  First Published Oct 4, 2023, 7:13 PM IST

சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைப்பு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.


சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள்  தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்துகின்றனர்.

12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருவோர் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 25-ஆம் நாள் முதலும்,  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என்று கோரி  27-ஆம் நாள் முதலும், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

அதுவம் 28-ஆம் நாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து பேசிய போது, “3 மாதத்தில் ஆய்வு செய்து மூவர் குழு அரசிடம் அறிக்கை அளிக்கும். பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம் வழங்கப்படும்” என்று கூறினார்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

click me!