விடுப்பு கிடைக்காததால் நின்ற மகளின் நிச்சயதார்த்தம்..! எஸ் ஐக்கு வருத்தம் தெரிவித்து டிஜிபி கடிதம்

By Ajmal Khan  |  First Published Sep 28, 2022, 4:47 PM IST

தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடை பட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்கக் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 
 


சிவகங்கை மாவட்டத்தை திருப்புவனத்தை சேர்ந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தான ராஜ் இவரது மகளுக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. இந்தநிலையில் கோவையில் திடீரென ஏற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் காவலர்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டு பல்வேறு மாவட்டத்தில் உள்ள காவலர்களை கோவை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனை காரணமாக தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக  காவலர் சந்தான ராஜ் வேதனையோடு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகள் நிச்சயதார்த்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வாகனம் எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. வேறு ஒருவரை கோவைக்கு அனுப்புங்கள் என்று கேட்டும் உயர் அதிகாரி மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். காவல்துறையில் 30 ஆண்டுகள் பணி புரிந்து என்ன பயன் என வேதனையோடு  குறிப்பிட்டிருந்தார். இந்த ஆடியோ சமூக வலை தளத்தில் பரவி பரபரப்ஐ ஏற்படுத்தியது. இந்தநிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தானராஜ்க்கு டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் எழுதியுள்ளார் அதில், 

மூன்றாக பிரிகிறதா சென்னை? சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் முடிவு என்ன?

Tap to resize

Latest Videos

அன்புள்ள சந்தானராஜ்... தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துகொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொளி வாயிலாக கண்டறிய நேர்ந்தது. தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடை பட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்கக் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வரும் நாள்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாள்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தான ராஜ்க்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு..! தலைவர், பொ.செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்

 

click me!