மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று... இங்கெல்லாம் மிக கனமழை கொட்டப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை..

Published : Dec 01, 2023, 01:48 PM ISTUpdated : Dec 02, 2023, 12:12 PM IST
மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று... இங்கெல்லாம் மிக கனமழை கொட்டப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை..

சுருக்கம்

இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 800 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு தென்கிழக்கே 790 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும்  3-ம் தேதி புயலாக வலுப்பெறும். இந்த புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னை – மசூலிப்பட்டணம் இடையே 4-ம் தேதி மாலை கரையை கடக்க உள்ளது. அடுத்து வரும் 4 நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 3,-ம் தேதி திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 4-ம் தேதி சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.

CM Stalin: மிக்ஜம் புயல் எச்சரிக்கை.. முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு.! என்னென்ன தெரியுமா?

டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வரையிலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்தக்காற்று வீசக்கூடும். டிசம்பர் 4-ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 80 கி.மீ வரையிலும் பலத்தக்காற்று வீசக்கூடும்.

அடுத்து வரும் 4 தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்த வரை இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என்றும் 3, 4 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய்க்கு ஓட்டு போடலனா சாப்பாட்டுல விஷம் வச்சிடுவேன்..! குடும்பத்தையே மிரட்டும் தீவிர ரசிகை!
திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..