தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் ஒண்டி வீரன் வீரவணக்க நிகழ்ச்சிகளையொட்டி, 8 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
தென்காசியில் ஊரடங்கு
தென்காசி மாவட்டத்தில சட்டம் ஒழுங்கிற்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் செயல்படுத்தி வருகிறார் அந்த வகையில் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் ஒண்டி வீரன் வீரவணக்க நிகழ்ச்சிக்காக 8 நாட்கள் ஊரங்கை அமல் படுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் 20.08.2024 அன்று நடைபெறும் ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் 01.09.2024 அன்று நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும்.
சென்னையில் பிரபல தொலைக்காட்சிக்கு சீல்.! என்ன காரணம் தெரியுமா.?
இன்று முதல் 8 நாட்களுக்கு அமல்
பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளுர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகைத்தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள், தென்காசி மாவட்டம் முழுமைக்கும், (18.08.2024 ) இன்று மாலை 6.00 மணி முதல் 21.08.2024 காலை 10.00 மணி வரையும் அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வருகிற 30.08.2024 மாலை 6.00 மணி முதல் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி காலை 10.00 மணிவரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 சட்டம் பிரிவு 163 (1) மற்றும் (2) தடையுத்தரவு அமுலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. . இந்த நேரத்தில் அனைவரும் கூட்டமாக செல்லாமல் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.