வாகன ஒட்டிகளுக்கு முக்கிய செய்தி! இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்! என்ன காரணம் தெரியுமா?

சென்னையில் இன்று நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவையொட்டி, போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விஐபி வாகனங்கள் குறிப்பிட்ட வழிகளில் செல்ல அனுமதிக்கப்படும், மற்ற வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Traffic diversion on major roads in Chennai tvk

இதுதொடர்பாக சென்னையில் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை. நேப்பியர் பாலம், வாலாஜா சாலை, அண்ணாசாலை மற்றும் கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest Videos

*  மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.

*  கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்துசெல்லுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

*  பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள்அண்ணா சிலை வழியாக பெரியார் சிலை, தீவுதிடல் மைதானம், PWD மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.

*  பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை. ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும்.

*  வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் 1000 மணி முதல் 1600 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.

*  வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாகவும் மற்றும் VVIP-கள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

*  தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர்சாலை மற்றும் வாலாஜாசாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image