Chennai News: போன வாரம் பெரம்பூர் பெண் போலீஸ்.. இந்த வாரம் அம்பத்தூர் எஸ்.ஐ துடிதுடித்து பலி.. நடந்தது என்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். 

Suffocation.. Ambattur police inspector death tvk

சாப்பிட்டுக்கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு அம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இதுதொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணன் (51). இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். 

Latest Videos

இதையும் படிங்க:  School Student: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. விரைவில் வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Chennai News: ஷாக்கிங் நியூஸ்! திடீர் மாரடைப்பு! சென்னையில் துடிதுடித்து உயிரிழந்த பெண் காவலர்!

இதேபோல் கடந்த 2ம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையதத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜெயசித்ரா(49). இவர் அயனாவரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image