School Student: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. விரைவில் வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில் வேலை நாட்கள் எண்ணிக்கையை வழக்கம் போல் 210 நாட்களாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
School Student
2024 - 2025ம் கல்வியாண்டில் ஜூன் 1ம் தேதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், மக்களை தேர்தல் முடிவு மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
Goverment School Teacher
இந்நிலையில் வழக்கம் போல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதில் அரசு ஊழியர்களைப் போன்று இனி ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிடுமாறு தங்களை வேண்டுகிறோம்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி! பாடப் புத்தகங்களின் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
School Holiday
இந்த முடிவினை விரைந்து எடுக்க சற்று காலதாமதம் ஆகும் என்று நீங்கள் கருதினால் அதுவரை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையும் நான்காம் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Saturday School Working Day
இந்நிலையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் 210 என குறைக்க இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம் கூறுகையில்: ஆசிரியர்களுக்கு 210 நாட்கள்தான் வேலை நாட்களாக இருப்பது வழக்கம். இந்த கல்வியாண்டில் 220 நாட்கள் என அறிவிக்கப்பட்டு சனிக்கிழமையும் வேலை நாட்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
School Education Department
இதை மாற்றி, வழக்கம் போல் 210 நாட்களாக அறிவிக்க வேண்டும் என உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த மாதமும், இந்த மாதமும் சனிக்கிழமை வேலை நாட்கள் இல்லை. அதன் அடிப்படையில், மீண்டும் வேலை நாட்கள் 210ஆக குறைக்கப்பட்டு, சனிக்கிழமை வேலை நாட்கள் சரி செய்யப்பட்டு, விரைவில் திருத்திய ஆணை வெளியிட, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.