இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்!

By SG Balan  |  First Published Aug 12, 2024, 4:53 PM IST

NIRF தரவரிசையில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக சென்னை ஐஐடி இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.


தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக சென்னை ஐஐடி இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் ஐஐடிக்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. சென்னை ஐஐடியைத் தொடர்ந்து, பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாவது இடத்தையும், மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

ஐஐடி காரக்பூர் ஆறாவது இடத்தையும், எய்ம்ஸ் டெல்லி ஏழாவது இடத்தையும், ஐஐடி ரூர்க்கி மற்றும் ஐஐடி கவுகாத்தி எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) 10வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

உமங் ஆப் மூலம் PF அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!

NIRF இன் ஒன்பதாவது தரவரிசை இந்த ஆண்டு திறந்த பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள், மாநில நிதியுதவி பெறும் அரசு பல்கலைக்கழகங்கள் என மூன்று புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. AICTE தலைவரான அனில் சஹஸ்ரபுதே, அடுத்த ஆண்டு முதல் நிலைத்தன்மை தரவரிசையையும் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகப் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 3வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மருந்தகத்திற்கான சிறந்த பல்கலைக்கழகமாக ஜாமியா ஹம்தார்ட் உள்ளது. ஐஐஎம் அகமதாபாத் தரவரிசையில் இந்தியாவின் சிறந்த வணிகப் பள்ளியாக இடம்பிடித்துள்ளது.

மேலாண்மை படிப்புகளுக்கான முதல் 10 இடங்களில் இரண்டு ஐஐடிகள் உள்ளன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவப் படிப்பில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் ஐஐடி ரூர்க்கி கட்டிடக்கலை படிப்புகளில் முதலிடத்தில் உள்ளது.

கடன் தொல்லையால் மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்! கெஞ்சியும் கேட்டு கதறிய மகள்!!

click me!