Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்த பகுதியில் தெரியுமா? வெளியான தகவல்!

Published : Aug 10, 2024, 02:05 PM IST
Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்த பகுதியில் தெரியுமா? வெளியான தகவல்!

சுருக்கம்

தமிழகத்தை பொறுத்தவரை கோவை, தஞ்சாவூர், புதுச்சேரி, சென்னை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை வேளச்சேரியில் நாளை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுதையொட்டி போக்குவரத்து அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை கோவை, தஞ்சாவூர், புதுச்சேரி, சென்னை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை வேளச்சேரி பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நடைபெற உள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் ஞாயிற்றுக்கிழமை தினங்களான ஆகஸ்ட் 11, 18 மற்றும் 25 ஆகிய நாட்களில் அதிகாலை 02.00 மணி முதல் 10.00 மணி வரை " Happy Street நிகழ்ச்சியினை நடத்த Times of India என்ற நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். மேற்படி "Happy Street" நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோவில் அள்ள அள்ள தங்கம்! கோடிகளில் குவிந்த உண்டியல் காணிக்கை! வியந்த பக்தர்கள்!

* ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் "U" திரும்பம் செய்து இரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.

* விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்புல் "U" திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!