சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.யாக பொறுப்பு வகித்த பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.யாக பொறுப்பு வகித்த பொன்.மாணிக்கவேல் பணி காலத்தில் சிலை கடத்தல் கும்பலுடன் கூட்டு வைத்து சதிச் செயலில் ஈடுபட்டதாக 2018ம் ஆண்டு காதர் பாட்சா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இவர் அதே பிரிவில் பணியாற்றி பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணவப்படுகொலை என்பது வன்முறை இல்ல; அக்கறை தான் சாமி - ரஞ்சித் விளக்கம்
இதனிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2023ம் ஆண்டு பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கு தொடர்பாக தான் சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
ரீல் லைப் மட்டும் இல்ல; ரியல் லைப்லயும் விவசாயம்னா ரொம்ப பிடிக்கும் - நடவு பணியில் சசிகுமார்
இந்த சோதனையின் போது பொன்.மாணிக்கவேல், அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 1989ம் ஆண்டு டிஎஸ்பி.யாக பணியில் சேர்ந்த பொன்.மாணிக்கவெல் ஐ.பி.எஸ்., எஸ்.பி., டிஐஜி, ஐஜி என பல பொறுப்புகளை வகித்து 2018ம் ஆண்டில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.