வள்ளுவர் கோட்டத்தில் முறையான அனுமதியின்றி கூட்டம் சேர்ந்ததாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்பட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங்க் சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என உத்தரவாதம் அளித்தார்.
சிலை கடத்தல் கும்பலுடன் கூட்டு? ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை
அந்த வகையில் கொலை வழக்கில் தொடர்புடைய 24 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக அவரது மனைவி பொற்கொடி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை; முதல் நாளிலேயே நிரம்பி வழிந்த விமானம்
அதன்படி 9ம் தேதி மாலை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பொற்கொடி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்பட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முறையான அனுமதியின்றி கூட்டம் கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.