பாலமேடு ஜல்லிக்கட்டு..! 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்..! காளை முட்டியதில் உயிரிழப்பு

Published : Jan 16, 2023, 02:11 PM ISTUpdated : Jan 16, 2023, 02:34 PM IST
பாலமேடு ஜல்லிக்கட்டு..! 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்..! காளை முட்டியதில் உயிரிழப்பு

சுருக்கம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில்  9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜை  காளை முட்டியதில் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் ராஜ் உயிரிழந்தார்.    

ஜல்லிக்கட்டு போட்டி

தமிழர் திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு மதுரையின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. போட்டியில் மொத்தமாக 335 மாடு பிடி வீரர்களும், 800க்கும் அதிகமான காளைகளும் பங்கேற்றது. இந்த போட்டியில் சீறி வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். ஒரு சில காளைகள் முடு பிடி வீரர்களை பந்தாடியபடி சென்றது. இந்தநிலையில் பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜ்  9 காளைகளை பிடித்து 3வது இடத்தில் இருந்தார்.

“காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல்” உறுதி மொழியுடன் தொடங்கிய பாலமேடு ஜல்லிகட்டு

மாடு பிடி வீரர் பலி

அப்போது வாடி வாசலில் இருந்து சீறி வந்த காளையை அடக்க அரவிந்த் ராஜ் காளை மீது பாய்ந்துள்ளார்.  அப்போது,  காளையானது அரவிந்த் ராஜின் வலது பக்க வயிற்றில் குத்தியது. இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த்ராஜ் துடிதுடித்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்தராஜ் உயரிழந்தார்.  இந்த சம்பவம் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

திருவள்ளுவருக்கு நெற்றியில் விபூதி பட்டை, காவி உடை.! வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை..! விமர்சிக்கும் நெட்டிசன்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை