ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையா..? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய பதில் இதோ

By Ajmal KhanFirst Published Jan 16, 2023, 1:25 PM IST
Highlights

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி வருகிற 18 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுத்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இன்று துவங்கி வருகின்ற 18ஆம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில்  மலேசியா ,ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ,கத்தார், அமெரிக்கா என 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி செஸ் ஒலிம்பியாட் போடி சிறப்பாக நடத்தியதை போன்று  சர்வதேச புத்தக்கண்காட்சியினையும் சிறப்பாக நடைபெறும்.  வரும் காலங்களில் மேலும் அதிக நாடுகளை சார்ந்தவர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.  

பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின்..! திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம்- இபிஎஸ்

இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தக கண்காட்சி நடக்க இருக்கிறது.எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர். 3 நாளில் வெளி நாட்டில் இருப்பவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட இணையலாம். 30முதல் 50 தமிழ்  புத்தகங்கள் வெளி நாட்டு மொழிகளுக்கு மொழிப்பெயர்க்க  திட்டமிட்டுள்ளோம்.அதே மற்ற நாடுகளை சார்ந்த நூல்களையும் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்க திட்டமிட்டுள்ளோம். தமிழக பதிப்பாளர்கள் வெளி நாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும்.

திருவள்ளுவருக்கு நெற்றியில் விபூதி பட்டை, காவி உடை.! வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை..! விமர்சிக்கும் நெட்டிசன்கள்

இது விற்பனைக்கான இடமல்ல நம் நூல்களை அவர்களும் அவர்களின் நூல்களை நாமும் அறிந்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.100 மொழிகளில் திருக்குறளை மொழியபெயர்த்து மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற புதன் கிழமை விடுமுறை விடப்பட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு பதில் அளித்த அவர், புதன் கிழமை பள்ளிக்கு விடுமுறை தொடர்பாக எந்த முடிவும் அரசு எடுக்கவில்லையென்றும் அதற்கான அறிவிப்பும் வெளியிடவில்லையென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்..! மீன், இறைச்சி வாங்க போட்டி போட்ட பொதுமக்கள்

click me!