18ஆம் தேதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறையா.? சமூக வலைதளத்தில் பரவும் செய்தி உண்மையா.? தமிழக அரசு கூறுவதென்ன. ?

By Ajmal KhanFirst Published Jan 16, 2023, 11:39 AM IST
Highlights

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்று திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வருகிற 18 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளதாக வெளியான தகவலை அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சனிக்கிழமை போகி பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை தை பொங்கல், திங்கட் கிழமை மாட்டுப்பொங்கல், செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் என தொடர் கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். வெளியூரில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணி நிமித்தமாக வந்த மக்கள் உறவினர்களோடு பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து 10ஆயிரத்திற்கும் மேற்ட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி... பங்கேற்று கண்டு ரசித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

18 ஆம் தேதி விடுமுறையா.?

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமையே தமிழக அரசு சார்பாக ஒரு நாள் முன் கூட்டியே விடுமுறை விடப்பட இருப்பதாக தகவல் வெளியானது அதனை அரசு அதிகாரிகள் மறுத்தனர். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை காணும் பொங்கலை கொண்டாடி விட்டு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்னை திரும்புவது கடினமாகும் எனவே வருகிற புதன் கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்த நேற்று முதல் சமூக வலைளத்தில் விடுமுறை தொடர்பாக செய்தியானது பரவி வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக வரும் புதன் கிழமை அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

மறுப்பு தெரிவித்த தமிழக அரசு

இந்த தகவல் பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசு அதிகாரிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர். தமிழக அரசு சார்பாக வருகிற 18 ஆம் தேதி விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லையென தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே 4 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் கூடுதலாக ஒரு நாள் விடுமுறைக்கு வாய்ப்பு இல்லையென கூறியுள்ளனர். 

இதையும் படியுங்கள்

திருவள்ளுவருக்கு நெற்றியில் விபூதி பட்டை, காவி உடை.! வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை..! விமர்சிக்கும் நெட்டிசன்கள்

click me!