மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்..! மீன், இறைச்சி வாங்க போட்டி போட்ட பொதுமக்கள்

By Ajmal KhanFirst Published Jan 16, 2023, 9:08 AM IST
Highlights

மாட்டுப்பொங்கலையொட்டி மீன் மற்றும் இறைச்சிகளை வாங்க மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
 

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் பணி நிமித்தமாக வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளில் சாமியை வழிபடுவதால் பெரும்பாலான இடங்களில் இறைச்சி உணவுகளை தவிர்த்து சைவை உணவுகளே தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதையொட்டி மீன் மற்றும் ஆடு, கோழிகளை வாங்க சந்தைகளில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

ஆளுநரை மிரட்டிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. திமுகவில் இருந்து நீக்கம்!! துரைமுருகன் அதிரடி!

இறைச்சிகடைகளில் கூடிய பொதுமக்கள்

மாட்டு பொங்கலையொட்டி சென்னை காசிமேடு, கடலூர், நாகை, துறைமுகங்களில் மீன்களை வாங்க மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். காசிமேட்டில் மீன் சந்தையில் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.800, சங்கரா ரூ.350, இறால் ரூ.300, சுறா ரூ.350, சீலா ரூ.400க்கு விற்பனை; கடலூரில் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.750, சங்கரா ரூ.300, நெத்திலி ரூ.200, இறால் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஆட்டிறைச்சி ஒரு கிலோ 800 முதல் 850 ரூபாய்க்கும், கோழியின் விலை 240 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

இபிஎஸ்- ஓபிஎஸ் ஐ விமர்சித்த மாஜி அமைச்சர் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்..! அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

click me!