
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு : அண்ணா பல்கலைகழக மாணவிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியாக ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டான். ஞானசேகரன் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளது. வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என பல முறை சிறையில் அடைக்கப்பட்டவன் என தெரியவந்தது. இதனையடுத்து ஞானசேகரன் சிறையில் இருந்து வெளியில் வரமுடியாத வகையில் குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் 24 ம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில்,
ஏப்ரல் 23 ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது, தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். 11 பிரிவின் கீழ் வழக்கு உறுதியாகியுள்ளாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 2 ஆம் தேதி ஞானசேகரனுக்கு என தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயந்தி கூறுகையில், ஞானசேகரன் மீது 11 குற்றமும் நிரூபணம் ஆகி உள்ளது.அனைத்து வகை சாட்சியின் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதி தீர்ப்பு என்ன தண்டனை என வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். தண்டனையை குறைக்க வேண்டும் என ஞானசேகரன் கேட்டுக்கொண்டார் . ஆனால் அரசு தரப்போ கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.