திமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடவுள்ள 3 வேட்பாளர்கள் யார்.? வெளியான பட்டியல்

Published : May 28, 2025, 10:33 AM ISTUpdated : May 28, 2025, 10:40 AM IST
STALIN

சுருக்கம்

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ல் தேர்தல் நடைபெறும். திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடுகிறது. வைகோ, அப்துல்லா போன்றோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து மீண்டும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அந்த வகையில் இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதன் படி ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. அந்த வகையில் திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியிடவுள்ளனர். இந்த நிலையில் திமுக வேட்பாளராக  வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் போட்டியிடுவார்கள் என்று திமுக அறிவித்துள்ளது. கூட்டணி கட்சியான கமல்ஹாசனுக்கு ஒரு இடத்தையும் திமுக ஒதுக்கியுள்ளது. 

மீதமுள்ள 2 இடங்களுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அப்துல்லா ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்