அடிபம்ப்பை புதைத்து கால்வாய் கான்கிரீட் ... ஒப்பந்ததாரரை கைது செய்தது போலீஸ்!!

Published : Aug 11, 2022, 09:41 PM IST
அடிபம்ப்பை புதைத்து கால்வாய் கான்கிரீட் ... ஒப்பந்ததாரரை கைது செய்தது போலீஸ்!!

சுருக்கம்

வேலூரில் அடிபம்ப்பை புதைத்து கால்வாய் கான்கிரீட் அமைத்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் சுரேந்திர பாபு கைது செய்யப்பட்டுள்ளார். 

வேலூரில் அடிபம்ப்பை புதைத்து கால்வாய் கான்கிரீட் அமைத்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் சுரேந்திர பாபு கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் அதிமுக ஒப்பந்ததாரர்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் குற்றம் சாட்டியுள்ளார். அதில் வேலூரில் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் கைபம்புடன் ஒப்பந்ததாரர் கழிவு நீர் கால்வாயுடன் சேர்த்து அதனை கட்டிவிட்டார் இதனால் கைபம்பை இயக்க முடியாத நிலையும் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலையும் ஏற்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு ஒப்பந்தங்கள் கமிஷன் அடிப்படையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அப்போதைய அமைச்சர் வேலுமணி ஆகியோர் அளித்துவிட்டனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் சான்றிதழ்கள் எரிப்பு… தீவைத்தவரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு!!

இதனால் தற்போது ஆட்சி மாறியும் திமுக ஆட்சி நடைபெற்றாலும் இந்த ஒப்பந்ததாரர்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் இது போன்று இருசக்கர வாகனத்தை வைத்து சாலை அமைப்பது கைபம்புடன் கால்வாய் அமைப்பது போன்ற பணிகளை செய்து எங்கள் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் சாடியிருந்தார். இந்நிலையில் இரண்டாவது மண்டல உதவி ஆணையர் அளித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் சுரேந்தர் பாபு மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்… ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தகுதியற்றவர்களுக்கு கமிஷன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தற்போதைய திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் ஒப்பந்ததாரர்கள் செயல்பட்டு வருவதாகவும்  சட்டமன்ற திமுக உறுப்பினர் கார்த்திகேயன் குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஒப்பந்ததாரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
ஈரோட்டில் விஜய்! டிச.16ல் கொங்கு மண்டலம் குலுங்கப் போகுது! செங்ஸ் போட்ட பிளான்