பாஜக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தமா? மக்களவை தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியா? அவரே கொடுத்த பரபரப்பு தகவல்!

By vinoth kumarFirst Published Mar 13, 2024, 10:38 AM IST
Highlights

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷண் ரெட்டி, வி.கே.சிங், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆலோசனை நடத்தினர். 

பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமரானால் தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் கூட்டணி அமைத்துள்ளோம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

வரும் மக்களவை தேர்தலில் தமிழக பாஜக தலைமையில் தனி அணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. ஆகையால், கூட்டணி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இதையும் படிங்க: EPS vs OPS : இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்... அடித்து கூறும் ஓபிஎஸ்- அதிர்ச்சியில் எடப்பாடி

இந்நிலையில்,  சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷண் ரெட்டி, வி.கே.சிங், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையானது சுமார் 12 மணிவரை நீடித்தது. 

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்: மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து தற்போது வரை முடிவெடுக்கவில்லை. தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக சார்பில் எந்த நிர்பந்தமும் தரவில்லை. கடந்த முறை போட்டியிட்ட சின்னம் சார்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம். 

இதையும் படிங்க: 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்.. திமுகவை பங்கம் செய்து குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்.!

பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமரானால் தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் கூட்டணி அமைத்துள்ளோம். பாஜக ஆட்சியில் தமிழக விரோத திட்டங்களை திணித்தால் அதை எதிர்ப்போம் என்றார். குடியுரிமை திருத்தச் சட்டம் இங்கு இருக்கக்கூடிய யாருடைய குடியுரிமையும் பறிக்கக்கூடிய சட்டம் அல்ல.  வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடிய சட்டம் அது.  இதனைத் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றார். 

click me!