ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு.. அருவிகளில் ஆக்ரோஷமாக கொட்டும் தண்ணீர்!

By vinoth kumarFirst Published Mar 13, 2024, 8:58 AM IST
Highlights

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த மூன்று மாதங்களாக மிக குறைந்த அளவிலே நீர்வரத்து வந்தன. 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியில் இருந்து 5,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகின்றன.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த மூன்று மாதங்களாக மிக குறைந்த அளவிலே நீர்வரத்து வந்தன. நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்த நிலையில் கடந்த 17 நாட்களாக நீர்வரத்து 200 கன அடியாக நீடித்து வந்தன. குறைந்த அளவு தண்ணீர் என்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வறண்டும் வெறும் பாறைகளாகவே கண்களுக்கு தென்பட்டன. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தன. 

இதையும் படிங்க: குடும்ப அட்டைகள் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!

இந்நிலையில் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2500 கன அடியாக நீடித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி செல்கின்றன. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: என்னது பிச்சை போடுகிறோமா? நடிகை குஷ்பு அவர்களே கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்! அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!

தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நீர்வரத்தால் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும். அதேபோல டெல்டா பாசன விவசாயிகளும் பயனடைவார்கள் என கருதப்படுகிறது.

click me!